இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை மே மாதம் 31 தேதி (வைகாசி 17) அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம் அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசிக்கு குருவானவர் 4வது மற்றும் 7வது வீட்டீற்கு அதிபதியானவர். குரு கன்னி ராசிக்கு கேந்திர அதிபதி தோஷம், மாரக அதிபதி தோஷம் மற்றும் பாதக அதிபதி தோஷம் உள்ளவர். ஆகவே குரு கன்னி ராசிக்கு கடுமையான பாபி ஆவார். குரு வலுவான பலம் இருந்தால் நல்லது இல்லை. பலம் இழந்த குரு கன்னி ராசிக்கு நல்லது. குரு இப்பொழுது பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். கன்னி ராசி போலவே மிதுன ராசியும் புதனுடைய வீடு ஆகும். புதன் குருவை சமமாக கருதுபவர். குரு புதனை எதி ரியாக கருதுபவர்.ஆகவே குரு பகை என்ற நிலையில் பலமற்று மிதுன ராசியில் உள்ளார். மேலும் மிதுன ராசி கன்னி ராசிக்கு 10வது இடம் ஆகும். பலமற்ற குரு கன்னி ராசிக்கு பெரிய கெடுதலை செய்ய மாட்டார். அதே நேரம் 4வது மற்றும் 7வது வீட்டிற்கான பலனையும் சரிவர செய்யாமல் போய் விட வாய்ப...