இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை மே மாதம் 31 தேதி (வைகாசி 17) அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம் அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசிக்கு, குரு 5வது மற்றும் 8வது வீட்டின் ஆதிபத்தியம் பெற்றவர். 8வது வீடு என்பது ஓரு துர் ஸ்தானமாகும். 8வது வீடு என்பது வாழ்க்கையில் பல வித துன்பங்களையும் குறிக்கும். நோய் படுதலையும் கடன் பட்டு எல்லா வித பிரச்சினைகளையும் சந்திப்பதையும் குறிக்கும். 5வது வீடு என்பது ஓரு நல்ல ஸ்தானமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கப்படும். இது குடும்பத்தில் உள்ள பெரியவர்களையும், பிள்ளைகளையும், யோகத்தையும் மற்றும் மேல்நிலை படிப்பினையும் தெரிவிக்கும். சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். குருவும் சூரியனும் ஒருவரை ஒருவர் நட்பாகக எண்ணுபவர்கள். ஆகவே குரு எந்த இடத்தில் இருந்து செயல் படுகிறார் என்பது முக்கியம். நல்ல இடத்தில் இருந்தால் குரு நன்மையே செய்வார். துர் ஸ்தானத்தில் குரு இருந்தார் என்றால் நன்மையைய...