இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை மே மாதம் 31 தேதி (வைகாசி 17) அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம் அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசிக்கு குரு 9வது மற்றும் 12வது வீட்டிற்கு அதிபதி ஆனவர். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் யின் நண்பரும் ஆவார். 9வது வீடு பாக்கிய ஸ்தானம் என்பதால் குரு மேஷ ராசிக்கு நன்மையே செய்யக்குடியவர். குரு நல்ல வீட்டில் இருந்தால் மட்டுமே நல்லது செய்யக்குடியவர். இந்த வருட குரு பெயர்ச்சியில் குரு மூன்றாவது வீடான மிதுனத்தில் இருக்கிறார். இந்த 3வது வீடு ஓரு நல்ல ஸ்தானம் அல்ல. ஆனால் 3வது வீடு கெட்ட ஸ்தானமும் அல்ல.மிதுனம் என்பது புதனுடைய வீடு ஆகும். குரு புதனை பகையாக கருதுபவர். ஆகவே குரு இந்த 3ம் இடத்தில் பகை என்ற நிலையில் வலுவிழந்து நிற்கின்றார். மேலும் மிதுனம் 9வது வீட்டிற்கு 7வது இடமாகவும் 12வது வீட்டிற்கு 4வது இடமாகவும் உள்ளது. 7வது ஸ்தானம் என்பது 9வது வீட்டுக்கான குருவிற்கு பலத்தினை மேலும் குறைத்து விடும். ஆகவே க...