இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை மே மாதம் 31 தேதி (வைகாசி 17) அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம் அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுன ராசிக்கு குரு 7வது மற்றும் 10வது வீட்டின் அதிபதி ஆவார். 7வது மற்றும் 10வது வீடு கேந்திர ஸ்தானமாகும். அதனால் குரு வலுத்து இருந்தால் கேந்திர ஆதிபத்திய தோஷம் உடையவர். மேலும் 7வது இடம் ஒரு மாரக மற்றும் பாதக ஸ்தானமாகும்.மேலும் குரு மிதுன ராசியின் அதிபர் புத னை கடுமையான பகையுடன் அணுகுபவர். ஆகவே குரு மிதுன ராசிக்கு ஒரு கொடுமையான பாபி ஆகிறார். குரு மிதுன ராசியில் பகை என்ற நிலையில் வலு குறைந்து நிற்கின்றார்.இது பாப கிரகம் வலு இழந்து இருப்பது நல்லது. மேலும் மிதுன ராசியில் இருப்பதால் மிதுன ராசிகாரர்களுக்கு குரு லக்கினத்தில் இருக்கிறார். லக்கினம் என்பது குருவுக்கு மிகவும் நல்ல ஸ்தானம் ஆகும். ஆக வலு இழந்த குரு லக்கினத்தில் இருந்து மிதுன ராசிகாரர்களுக்கு குரு பெயர்ச்சியின் மூலமாக அடுத்த ஒரு வருடம் பலன்களை அளிக்க போகிறார். 7வது ...