இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை மே மாதம் 31 தேதி (வைகாசி 17) அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம் அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.
குரு 08.06.2013 அன்று அஸ்தமனமாகிறார். இந்த காலத்தில் குருவால் கிடைக்கும் நல்ல பலன்கள் அனைத்தும் தடைப்படும். மேலும் தனுசு ராசி மற்றும் தனுசு இலக்கின மக்கள் அனைவரும் நல்ல நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள். 02.07.2013 அன்று குரு மீண்டும் உதயமாகிறார்.
சொத்து, வாகனம் மற்றும் பிரயாணங்கள் விசயங்களில் சற்றே யோசித்து முடிவு எடுப்பது நல்லது. அல்லது முக்கிய முடிவுகளை தள்ளி போடுவது நல்லது. நீங்கள் எடுக்கும் முடிவுகளால் வாழ்க்கை துணையுடன் அப்பிப்ராய பேதம் இல்லாமல் பார்த்து கொள்வது முக்கியம். தாயாருடன் சற்று அனுசரித்து செல்வது உத்தமம். சற்று உடல் நிலையில் ஆசௌகரியம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தொழில் வகை கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள் உறவுகளில் பாதிப்பு வராமல் பார்த்து கொள்வது நலம்.
02.07.2013 முதல் 13.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
30.07.2013 முதல் 15.08.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
குரு இந்த காலத்தில் வக்கிர நிலையை அடைகின்றார். எந்த ஓரு கிரகமும் வக்கிர நிலையை அடையும் பொழுது தன்னுடைய உண்மையான போக்கினை மாற்றி நாம் எதிர்பாராத பலனை செய்யும். நாம் இந்த வக்கிர குரு பலனை பின்பு ஆராய்வோம்.
தனுசு ராசியினரின் கவனத்திற்கு:
தனுசு ராசிக்கு அதிபதியே குருவே தான். மேலும் தனுசு ராசிக்கு குரு லக்கினம் மற்றும் 4வது வீட்டுக்கு அதிபதியானவர். குரு தனுசு ராசிக்கு அதிபதியனாலும் 4வது வீட்டுக்கு அதிபதி ஆவதால் கேந்திர ஆதிபத்திய தோஷம் உண்டு. ஆகவே தனுசு ராசிக்கு குரு வலுக்க கூடாது மாறாக குரு வலுவிழந்து இருப்பது மிகவும் நல்லது. மேலும் குரு எந்த இடத்தில இருக்கிறார் என்பது மிக மிக முக்கியம். குரு தான் இருக்கும் இடத்தை வைத்தே பலனை தருவார்.
இப்பொழுது குரு பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். மிதுன ராசி புதனுடைய வீடு ஆகும். புதன் குருவை சமமாக கருதுபவர். குரு புதனை எதிரியாக கருதுபவர்.ஆகவே குரு பகை என்ற நிலையில் பலமற்று மிதுன ராசியில் உள்ளார். இந்த நிலை ஒரு வகையில் நல்லது என்றாலும் மிதுன ராசி, தனுசு ராசிக்கு 7வது இடம் ஆகும். 7வது இடம் தனுசு ராசிக்கு மாரக மற்றும் பாதக ஸ்தானம் ஆகும். மேலும் 7வது இடம் குருவின் பலத்தினை முற்றிலும் குறைத்து விடும். இது ஒரு வகையில் நல்லது என்றாலும் குரு 4வது மற்றும் இலக்கின பலனையும் செய்யாமல் போய்விடுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டு விடும்.
ஆக குரு லக்கினம் மற்றும் 4வது வீட்டுக்குரிய பலனையும் நல்ல முறையில் கொடுத்து பின்பு அதன் மூலம் பாதகமான பலனையும் மறக்காமல் தருவார்.
ஆக குரு லக்கினம் மற்றும் 4வது வீட்டுக்குரிய பலனையும் நல்ல முறையில் கொடுத்து பின்பு அதன் மூலம் பாதகமான பலனையும் மறக்காமல் தருவார்.
ஆகவே, தனுசு ராசியினர் அசட்டுத்தனமாக அல்லது அவசரமாக முடிவுகளை எடுக்காமல் சற்று நிதானமாக செயல் பட்டால் கெடு பலனை உறுதியாக தவிர்க்கலாம். இந்த குரு பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு அவர்கள் எடுக்க போகும் முடிவினை பொறுத்தே பலன்கள் அமையும் என்பதை புரிந்து செயல்பட வேண்டும். இப்பொழுது நாம் 2013 வருடத்திற்க்கான குரு பெயர்ச்சியின் பலன்களை நாம் பார்ப்போம்.
31.05.2013 முதல் 08.06.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
தனுசு ராசியினர் எடுக்கும் முடிவுகள் மாறுபட்ட பலனை கொடுக்கும். ஆகவே எதிலும் சற்று யோசித்து செயல் படவோ அல்லது நிதானமாக செயல் படுவது என்பது புத்திசாலித்தனம். சொத்து, வாகனம் மற்றும் பிரயாணங்கள் போன்ற விசயங்களில் எதிர் பார்த்த பலன் கிடைப்பதற்கு சற்றே தாமதம் ஆகலாம். தாயார் உறவிலோ அல்லது அவர்கள் மூலம் எதிர்பார்க்கும் விஷயங்களிலோ சற்று பொறுமையுடன் செயல் படுவது புத்திசாலிதனம் . தனுசு ராசியினர் எடுக்கும் முடிவுகள் வாழ்க்கை துணையுடன் சற்று மன வருத்தத்தை ஏற்படுத்தலாம்.
08.06.2013 முதல் 02.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
குரு 08.06.2013 அன்று அஸ்தமனமாகிறார். இந்த காலத்தில் குருவால் கிடைக்கும் நல்ல பலன்கள் அனைத்தும் தடைப்படும். மேலும் தனுசு ராசி மற்றும் தனுசு இலக்கின மக்கள் அனைவரும் நல்ல நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள். 02.07.2013 அன்று குரு மீண்டும் உதயமாகிறார்.
சொத்து, வாகனம் மற்றும் பிரயாணங்கள் விசயங்களில் சற்றே யோசித்து முடிவு எடுப்பது நல்லது. அல்லது முக்கிய முடிவுகளை தள்ளி போடுவது நல்லது. நீங்கள் எடுக்கும் முடிவுகளால் வாழ்க்கை துணையுடன் அப்பிப்ராய பேதம் இல்லாமல் பார்த்து கொள்வது முக்கியம். தாயாருடன் சற்று அனுசரித்து செல்வது உத்தமம். சற்று உடல் நிலையில் ஆசௌகரியம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தொழில் வகை கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள் உறவுகளில் பாதிப்பு வராமல் பார்த்து கொள்வது நலம்.
02.07.2013 முதல் 13.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
முடிவுகள் எடுப்பதில் நல்ல நிதானம் காட்ட தொடங்குவிர்கள். சொத்து, வாகனம் மற்றும் பிரயாணங்கள் போன்றவற்றின் விசயங்களில் அனுகூலமான பலன்கள் நடைபெறும். தாயார் மற்றும் வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வீர்கள். சற்று சுகமான நேரங்களை அனுபவிக்க வாய்ப்பு
கிடைக்கும்.
13.07.2013 முதல் 30.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
நீங்கள் எடுக்கும் தவறான முடிவுகளால் வாழ்க்கை துணை மற்றும் தாயாருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். சொத்து, வாகனம் மற்றும் பிரயாணங்களில் முற்றிலும் நேர் எதிர்மறையான பலன்களே உண்டாகும். முக்கிய முடிவுகளை இந்த காலப் பொழுதில் எடுக்காமல் தள்ளி போடுவது நல்லது. தொழில் வகை கூட்டாளிகள் மற்றும் நண்பர்களுடன் சற்று அனுசரித்து போவது நலம்.
30.07.2013 முதல் 15.08.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
தனுசு ராசியினருக்கு இதுவரை இருந்து வந்த எதிர் மறையான சூழ்நிலைகள் மாறி சற்று சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். ஆனாலும், பெரிய அளவு மாற்றங்கள் ஏற்படாது. சொத்து, வாகனம் மற்றும் பிரயாண விஷயங்களில் குழப்பமான நிலைமையே இருந்து வரும். தனுசு ராசியினர் முடிவு எடுப்பதில் சரியான நிலைபாடினை எடுக்க முடியாமல் திணறுவார்கள் அல்லது சம்பந்தம் இல்லாத முடிவு எடுத்து, அதனால் பாதிக்கவும் படுவார்கள்.
15.08.2013 முதல் 23.09.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
முதலில் தனுசு ராசியினர் சொத்து, வாகனம் மற்றும் பிரயாணம் போன்ற விஷயங்கள் சற்று கடினமாக நிலையினை சந்திக்க நேர்ந்தாலும் அதில் வெற்றியும் பெறுவார்கள். தனுசு ராசியினர் சில நேரம் சிந்திக்காமல் எடுக்கும் முடிவுகள் அல்லது அசட்டுத்தனமான முடிவுகள் நல்ல பலனை தந்து விடும். தாயார் மற்றும் வாழ்க்கை துணையுடன் உள்ள உறவுகள் பலப்படும். தனுசு ராசியினருக்கு அடிப்படை வாழ்க்கை தரம் நல்ல விதமாக ஏற்படும். தொழில் வகை கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நல்ல மதிப்பு ஏற்படும்.
23.09.2013 முதல் 08.11.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
மீண்டும் முடிவுகள் எடுப்பதில் தனுசு ராசியினரிடம் சற்றே தடுமாற்றம் காணப்படும். தாயார் மற்றும் வாழ்க்கை துணையுடன் உறவில் சற்று தொய்வு ஏற்படலாம். சொத்து, வாகனம் மற்றும் பிரயாணங்கள் போன்றவற்றில் ஏற்பட்டு வந்த சாதகமான போக்கு மாறி சிறிய அளவு தடைகள் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில் வகை நண்பர்களிடம் சற்றே அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கை தரம் ஓரே நிலையில் இல்லாமல்
சற்று வித்தியாசமன நிலைகளை தனுசு ராசியினருக்கு இந்த கால கட்டத்தில் 2013 குரு பெயர்ச்சியில் அளிப்பார்.
8.11.2013 முதல் 21.02.2014 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
குரு இந்த காலத்தில் வக்கிர நிலையை அடைகின்றார். எந்த ஓரு கிரகமும் வக்கிர நிலையை அடையும் பொழுது தன்னுடைய உண்மையான போக்கினை மாற்றி நாம் எதிர்பாராத பலனை செய்யும். நாம் இந்த வக்கிர குரு பலனை பின்பு ஆராய்வோம்.
தனுசு ராசியினரின் கவனத்திற்கு:
1. குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி பலன் நமது வாழக்கையில் சிறிய அளவே மாற்றங்களை கொடுக்கும் சக்தி உள்ளது.
2. அவரவர் தசா மற்றும் புத்தி பலன்களை பொறுத்தே வாழ்கையில் நிகழ்வுகள் நடைபெறும்.
3. இந்த குரு பெயர்ச்சி பலன்கள் உங்களின் தசா மற்றும் புத்தி அடிப்படையில் சற்று மாறுபட்டு நடைபெறும்.
4. குரு பிறந்த ஜாதகத்தில் நல்ல விட்டில் இருந்தால், குரு பெயர்ச்சி நன்றாக அமையவில்லை என்றாலும் வாழ்க்கை நன்றாகவே அமையும்.
5. நல்ல திசை நடந்து கொண்டு இருக்கும் பொழுது, கெடுதலான குரு பெயர்ச்சியால் பெரிய துன்பங்கள் நடக்காது.
6. தனுசு ராசியினர் குருவின் அல்லது இலக்கின அதிபதியின் திசை நடந்து அந்த கிரகம் துர் ஸ்தானங்களிள் இருந்தால் முடிவுகள் தவறாக எடுக்கப்பட்டு அதனால் கவுரவம் பாதிக்க படும்.
7. தனுசு ராசியினருக்கு 7வது வீட்டு கிரகம் அல்லது குரு (அ) சுக்கிரனுடைய திசை நடந்து அந்த கிரகம் துர் ஸ்தானங்களில் இருந்தால், வாழ்க்கை துணையுடன் சற்று கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
8. தனுசு ராசியினருக்கு 4வது வீட்டு கிரகம், செவ்வாய் அல்லது சுக்கிரன் கிரகத்தின் திசை நடந்து, அந்த கிரகம் துர் ஸ்தானத்தில் இருந்தால், சொத்து மற்றும் வாகன விசயங்களில் அனுகூலமற்ற நிலைகள் ஏற்படும்.
9. தனுசு ராசியினருக்கு சந்திரன் அல்லது 4வது வீட்டிற்கு உரிய கிரகம் துர் ஸ்தானத்தில் இருந்தால் கண்டிப்பாக தாயார் உறவில் சற்று அனுகூலமற்ற சூழ்நிலை நீடிக்கும்.
10. தனுசு ராசியினர் 4வது, 6வது அல்லது 8வது கிரகத்தின் திசை நடந்து, அந்த கிரகம் துர் ஸ்தானத்தில் இருந்தால் உடல் நல கோளாறுகள் ஏற்படும்.
11. குருவின் பலமற்ற பார்வை 11வது, 1வது மற்றும் 3வது வீட்டில் விழுகின்றது. இதனால் பெரிய அளவு கவுரவ குறைச்சல் ஏற்படாது.
12. குருவின் பரிகாரம் செய்யும் பொழுது இந்த குரு பெயர்ச்சியால் வரும் துன்பங்கள் குறைந்து இன்ப சூழ்நிலை நிலவும்.

குரு பரிகார முறைக்கு எங்களது www.jothidapariharam.blogspot.in என்ற வலைதளத்திற்கு வாருங்கள். படித்து பயன் பெறுங்கள். மேலும் உங்கள் ஜாதகத்தை சரியாக கணிப்பதற்கு Author Meganathan. G ஐ தொடர்பு கொள்ளுங்கள். வெளி நாட்டில் வசிப்பவர்கள் Pay Pal மூலம் பணம் செலுத்தி ஜாதகம் பற்றிய முழு விபரங்களை பெற்று கொள்ளலாம்.
Comments
Post a Comment